ஐ.பி.எல். கிரிக்கெட்- மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

ipl match mumbai indians vs sunrisers hyderabad

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.

ipl match mumbai indians vs sunrisers hyderabad

அதைத் தொடர்ந்து 209 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக டி காக்- 67, இஷான் கிஷன்- 31, ஹர்திக் பாண்டியா- 28, பொல்லார்டு- 25 ரன்களை எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 60 ரன்கள் எடுத்தார்.

hyderabad sunrises IPL match mumbaiindians
இதையும் படியுங்கள்
Subscribe