ipl match mumbai indians vs kings xi punjab teams second super over match

Advertisment

ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், இரண்டாவது சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

துபாயில் முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்ததால் சமனில் முடிந்தது.

ipl match mumbai indians vs kings xi punjab teams second super over match

Advertisment

வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட முதல் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்ற போட்டியாக, இந்தப் போட்டிஅமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6- வது இடத்திற்குச் சென்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7- வது இடத்திற்குச் சென்றது.

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக டி காக் 53, குருணால் பாண்ட்யா, பொல்லார்ட் தலா 34 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 77, கெய்ல், பூரன் தலா 24, ஹூடா 23 ரன்கள் எடுத்தனர்.