Skip to main content

சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்திய பெங்களூரு!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

ipl match mumbai indians vs bangalore royal challengers

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். 

 

துபாயில் நேற்று (28/09/2020) நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்தது. பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ் 55, தேவ்தத் படிக்கல் 54, ஆரோன் பின்ச் 52, கேப்டன் கோலி 3 ரன்கள் எடுத்தனர்.

ipl match mumbai indians vs bangalore royal challengers

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 8 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

 

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 58 பந்தில் 99, பொல்லார்டு 60 ரன்கள் எடுத்தனர்.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.  


 

 

Next Story

அசுர வேகத்தில் கார் ஓட்டிச் செல்லும் அஜித்; த்ரில் வைரல் வீடியோ!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Ajith drives a car at breakneck speed in dubai

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடா முயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் பல மாதங்கள் இப்படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

இடைவெளிக்கு பிறகு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, இப்படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. 

திரைப்படங்களைத் தாண்டி பைக் மற்றும் கார் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தும் நடத்தியும் வருகிறார் அஜித். 

இந்த நிலையில், அஜித்குமார் காரில் வேகமாக ஓட்டிச் செல்லும் வீடியோவை சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அஜித் துபாயில் உள்ள கார் ரேஸ் மைதானத்திற்கு சென்று, பந்தய காரை அசுர வேகத்தில் ஓட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவில், பந்தய கார் ஓட்டிச் செல்லும் அஜித், சுமார் 200 கி.மீ வேகத்தில் ஓட்டிச் செல்கிறார். மேலும், இது தொடர்பான காட்சிகள் கடந்த 21ஆம் தேதி நடந்ததாகவும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

‘யூடியூபர் இர்பான் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’ - தமிழக அரசு விளக்கம்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
TN govt explanation about What is the action taken in the case of YouTuber Irfan

பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து சமீபத்தில் கண்டறிந்துள்ளார். இதனையடுத்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார். அந்த வீடியோவை சுமார் 20 லட்சம் பேர் பார்த்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் குழந்தையின் பாலினத்தைப் பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

அதே சமயம் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து வெளியில் சொல்பவர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்ற நிலையில் இர்பானுக்கு மேலும் சிக்கல் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இர்பான் விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளது. அதில், “யூடியூபர் இர்பான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைப் பெண் என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து கடந்த 19 ஆம் தேதி (19.05.2024) அன்று தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர். 

TN govt explanation about What is the action taken in the case of YouTuber Irfan

இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) இன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மூலம் இர்பானுக்கு நேற்று (21.05.2024) அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காகக் குறிப்பானைச் சார்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இர்பான் மூலம் இது தொடர்பாக வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவினை சமூக வலைத்தளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட யூடியூப் தளத்திற்கும், கணினி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் மே 21 ஆம் தேதி  (21.05.2024) நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.