ipl match kolkata vs chennai super kings team

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

Advertisment

அபுதாபியில் நேற்றிரவு (07/010/2010) நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்தார்.

ipl match kolkata vs chennai super kings team

Advertisment

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக வாட்சன் 50, அம்பாதி ராயுடு 30, சாம் கரண் 17, தோனி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசிக் கட்டத்தில் கேதர் ஜாதவ் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பியதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

துபாயில் இன்றிரவு (08/10/2020) 07.30 மணிக்கு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்மோதுகின்றன.