Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி தோல்வி!

IPL MATCH HYDERABAD SUN RISERS VS CHENNAI SUPER KINGS

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

துபாயில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. ஐதராபாத் அணியில் பிரியம் கார்க் 51, அபிஷேக் ஷர்மா 31, மணீஷ் பாண்டே 29, வார்னர் 28 ரன்களை எடுத்தனர்.

IPL MATCH HYDERABAD SUN RISERS VS CHENNAI SUPER KINGS

Advertisment

அதைத்தொடர்ந்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

வெற்றிக்காக இறுதி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா 50, தோனி 47 ரன்கள் எடுத்தனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் தொடர்ந்து 8- வது இடத்தில் நீடிக்கிறது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

chennai super kings IPL match
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe