IPL MATCH DELHI VS RAJASTHAN TEAMS

ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisment

துபாயில் நேற்றிரவு 07.30 மணிக்கு நடைபெற்ற ஐ.பி.எல்கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக தவான் 57, ஸ்ரேயஸ் ஐயர் 53, ஸ்டாய்னிஸ் 18 ரன்கள் சேர்த்தனர்.

Advertisment

IPL MATCH DELHI VS RAJASTHAN TEAMS

அதைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 148 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 41, உத்தப்பா 31, ஜோஸ் பட்லர் 22 ரன்கள் சேர்த்தனர்.

இந்த வெற்றிக்குப்பிறகு புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.