IPL MATCH DELHI AND PUNJAB TEAMS

Advertisment

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு, 164 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் ஷிகர் தவான் அசத்தலாக விளையாடி 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தார்.

IPL MATCH DELHI AND PUNJAB TEAMS

Advertisment

அதைத் தொடர்ந்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நிக்கோலஸ் பூரான் 53, மேக்ஸ்வெல் 32 ரன்கள் எடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

அபுதாபியில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.