Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது டெல்லி!

ipl match chennai super kings vs delhi capitals teams

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment

ஷார்ஜாவில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக டூ பிளஸ்ஸி 58, ராயுடு 45, வாட்சன் 36, ஜடேஜா 33 ரன்கள் சேர்த்தனர்.

Advertisment

ipl match chennai super kings vs delhi capitals teams

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கைக் கடந்தது. டெல்லி அணி தரப்பில் ஷிகர் தவான் டி20 போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

சென்னையுடனான வெற்றிக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

chennai super kings delhi Caveri meeting IPL match
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe