/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/csk (4).jpg)
ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல்கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 42, அம்பத்தி ராயுடு 41, சாம் கரன் 31 ரன்கள் எடுத்தனர். அதேபோல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் சந்தீப் சர்மா, கலீல் அகமது, நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sun_28.jpg)
அதைத் தொடர்ந்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 147 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் கேன் வில்லியம்சன் 57, பேர்ஸடோவ் 23, பிரியம் கர்க் 16 ரன்கள் எடுத்தனர்.
துபாயில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)