/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajasthan66.jpg)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்டிக் பாண்ட்யா 21 பந்துகளில் 60 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னும் எடுத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajasthan (3).jpg)
பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் பென்ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் 107 ரன்களும், சஞ்சு சாம்சன் 54 ரன்களும் எடுத்தனர்.
ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)