ஐ.பி.எல்: இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

IPL: Kolkata Knight Riders in the final!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்குள் எந்த அணி செல்லும் என்ற முடிவை தீர்மானிக்கும் போட்டி இன்று (13/10/2021) இரவு 07.00 மணிக்கு ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

IPL: Kolkata Knight Riders in the final!

அக்டோபர் 15- ஆம் தேதி அன்று இரவு 07.30 மணியளவில் நடைபெறும் ஐ.பி.எல் 2021 இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

chennai super kings FINAL MATCH IPL match kolkata knight riders
இதையும் படியுங்கள்
Subscribe