IPL CRICKET TODAY START AT CHENNAI

Advertisment

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 14- வது ஐபிஎல் (Indian Premier League- IPL) டி20 தொடர் சென்னையில் இன்று (09/04/2021) தொடங்குகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று (09/04/2021) இரவு 07.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. கரோனா கட்டுப்பாடு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களுக்கு இந்தாண்டும் அனுமதி இல்லை.

சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் என 8 அணிகள் பங்கேற்கின்றனர். சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. 6 நகரங்களில் மட்டுமே போட்டி நடப்பதால் 8 அணிகளும் அதன் சொந்த மைதானத்தில் விளையாட திட்டமிடவில்லை. 14- வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 30- ஆம் தேதி நடக்கிறது.

Advertisment

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.