கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 222 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (12/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 91, தீபக் ஹூடா 64, கெயில் 40 ரன்களைச் சேர்த்தனர்.
அதைத் தொடர்ந்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியுள்ளது.