ipl cricket match today delhi capitals vs punjab kings teams

Advertisment

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (18/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல்- 61, மயங்க் அகர்வால் 69 ரன்களை எடுத்தனர். அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ரபாடா, ஆவேஷ் கான், மேரிவாலா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியுள்ளது.