/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mum1.jpg)
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி 6 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
துபாயில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ் அணி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mum7.jpg)
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 55, சூர்யகுமார் யாதவ் 51, டி காக் 40 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 65, அக்சர் பட்டேல் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)