Advertisment

ஐபிஎல் எப்போது தொடக்கம்? - நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!

ipl

Advertisment

உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் ஐபிஎல்லை மார்ச் 26 ஆம் தேதியே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் நெட்வோர்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வான்கடேயில் 20 போட்டிகளையும், பிரபோர்ன் மைதானத்தில் 15 போட்டிகளையும், டி.ஓய் பாட்டீல் மைதானத்தில் 20 போட்டிகளையும், 15 போட்டிகளை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) கஹுஞ்சே மைதானத்தில் நடத்தவும் இந்த நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்ட்ரா அரசின் அறிவுறுத்தல்களின்படி, மைதானத்தில் அனுமதிக்கப்படும் ரசிகர்களின் எண்ணிக்கை முடிவு செய்யவும் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe