ipl

Advertisment

இந்தியாவில்ஐபிஎல் கிரிக்கெட்திருவிழா ஆண்டுதோறும்நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள்விரைவில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் ஏலம் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பொதுவாக ஐபிஎல் ஏலத்திற்கு, அணிகளில் இடம்பெறாத வீரர்கள்தங்களைப் பதிவு செய்து கொள்வார்கள். இதில்புதிய வீரர்கள்மட்டுமின்றி, அணிகளால் கழட்டிவிடப்பட்டவர்களும் அடங்குவர். அப்படி பதிவு செய்துகொண்டவீரர்களின் பட்டியல், அனைத்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கும் அனுப்பப்படும். அப்படி அனுப்பப்பட்ட பட்டியலில்இருந்து அணி உரிமையாளர்கள், தாங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பும்வீரர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இவ்வாறு அணி உரிமையாளர்கள், அணியிலெடுக்க விரும்பும்வீரர்கள்மட்டுமேஏலத்தில் இடம்பெறுவர். ஏற்கனவே இந்த ஆண்டிற்கான ஏலத்தில் 1,114 வீரர்கள்இடம்பெற்றநிலையில், 292 வீரர்களைமட்டுமேதங்கள் அணிகளில் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 822 வீரர்களைஎந்த அணியும்எடுக்க முன்வரவில்லை.

Advertisment

தற்போது அணிகள்எடுக்க விரும்பியவீரர்களின் பட்டியல் வெளியாகிவுள்ளது. அதில்ஹர்பஜன் சிங், கேதர்ஜாதவ் ஆகியோர்இடம்பெற்றுள்ளனர். சூதாட்ட புகாரில்சிக்கிமீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ள ஸ்ரீசாந்த் இடம்பெறவில்லை. அர்ஜுன்டெண்டுல்கரும் இறுதி ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.