இந்தியாவில்வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள்இன்று ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன்ராய்ஏலம் எடுக்கப்படவில்லை. கேதார்ஜாதாவையும்எந்த அணியும்முதல் கட்ட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
இந்த ஏலத்தில், மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும்,மேக்ஸ்வேல் ரூ.14.25 கோடிக்கும்ஏலம் போன நிலையில், மும்பைஇந்தியன்ஸ் அணி,ஆடம் மில்னேவை ரூ.3.2 கோடிக்கும், நேதன் குல்டர் நைலை ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது.
உமேஷ்யாதவைடெல்லி அணி ஒரு கோடிரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.இஷ் சோதியை யாரும் ஏலம் கேட்கவில்லை. தமிழ்ப் புலவர் என்று சென்னை ரசிகர்களால் அழைக்கப்பட்டஹர்பஜன் சிங்கும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. பியூஷ் சாவ்லாவை நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ரூ.2.4 கோடிக்கு ஏலம்எடுத்துள்ளது.