Advertisment

அமர்க்களப்பட இருக்கும் ஐபிஎல்; புதிய விதிகள் அறிவிப்பு

ipl 2023; new rules added

ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு முதல் இம்பாக்ட் ப்ளேயர் என்ற புதிய விதிமுறை மற்றும் மேலும் சில விதிகளை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

Advertisment

ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன. இந்தியா முழுவதும் ஐபிஎல் காய்ச்சல் அடிக்கத் துவங்கியுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோத உள்ளன. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகம் சில புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

Advertisment

அந்த வகையில், இம்முறை இம்பாக்ட் ப்ளேயர் என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறையின் படி ஒவ்வொரு அணியும் ப்ளேயிங் 11 மட்டுமல்லாது கூடுதலாக ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே சேர்த்துக்கொள்ள முடியும். அப்படி சேர்க்கப்படும் போது நடுவர் எவ்வாறு சிக்னல் கொடுக்க வேண்டும் என்பதையும் பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.

போன ஆண்டு வரை டாஸ் போடும் முன்பு இரு அணியின் வீரர்கள் விவரமும் தெரிவிக்கப்படும். ஆனால், இனி டாஸ் போடப்பட்ட பின் ப்ளேயிங் 11 மற்றும் கூடுதலாக 5 மாற்று வீரர்களையும் அறிவிக்கலாம். இதன் மூலம் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டியின் போது பேட்டிங் செய்யும் வீரர்களை தேவையில்லாமல் கீப்பரோ அல்லது பீல்டிங் செய்யும் வீரரோ சீண்டினால், அப்பொழுது கடைசியாக வீசப்பட்ட பந்து டெட் பால் எனக்கூறி பேட்டிங் அணிக்கு கூடுதலாக5 ரன்கள் கொடுக்கப்படும்.

அதே போல் பந்துவீசும் அணி ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட நேரம் முடிந்த பின் வட்டத்திற்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே நிற்கவைக்க வேண்டும். வைடுகள் மற்றும் நோபால் குறித்தும் வீரர்கள் ரிவியூ கேட்கும் வசதியை ஐபிஎல்லில் பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe