Skip to main content

டேபிள் டாப்பரா? ஈடன் கார்டனுக்கு வாங்க! - ஐ.பி.எல். தகுதிச்சுற்று #2

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி லிஸ்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆளாக இடம்பெற்றுவிட்டது. ஆனால், அந்த அணியுடன் மோதப்போகும் இன்னொரு அணி எது என்பது இன்றுதான் தெரியும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இந்தப் போட்டி, ஈடன் காரட்ன் மைதானத்தில் வைத்து இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 
 

kkr

 

இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்து தோற்கடிக்கவே முடியாத அணியாக இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை அணியிடம் முதல் தகுதிச்சுற்றில் படுதோல்வி அடைந்தது. அந்தத் தோல்வியையும் சேர்த்து தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது அந்த அணி. டிஃபெண்டிங் எக்ஸ்பெர்ட்ஸ் என புகழப்பட்ட அந்த அணியால், தொடர்ந்து அதைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் ஐதராபாத் அணி விளையாடிய முதல் 10 போட்டிகளில் எட்டில் வெற்றிபெற்றிருந்து. 
 

இன்றைய போட்டியில் இன்னொரு அணியான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐதராபாத் அணிக்கு நேரெதிராக கடைசியாக ஆடிய நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. ராஜஸ்தான் அணியுடனான எலிமினேட்டரில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த சீசனில் அந்த அணி வீழ்த்திய மொத்த விக்கெட்டுகளில் 50 சதவீதம் வீழ்ந்ததற்கு சுழற்பந்து வீச்சாளர்களே காரணம். அதேபோல், இந்த இரண்டு அணிகளும் மோதிய 14 போட்டிகளில் 9 முறை கொல்கத்தா அணியே வெற்றிபெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த அணிகள் களமிறங்கிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஐதராபாத் அணி வெற்றிபெற்றிருக்கிறது.
 

srh

 

டேபிள் டாப்பராக இருந்த அணியென்றால் கோப்பையை வெல்லும் என்று உறுதியாக சொல்லமுடியாது. 2009, 2012 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் 2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிகள் அதையே உணர்த்தின. ஆனால், டி20 போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்தகால வரலாறுகளை இன்றைய போட்டி மாற்றலாம். மாற்றுமா ஐதராபாத் அணி? பொறுத்திருந்து பார்க்கலாம். 

 

 

Next Story

தங்கராசு நடராஜனை தங்கத்தால் ஜொலிக்க வைத்த சன் ரைசர்ஸ்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 Sunrisers made Thangarasu Natarajan shine with gold!

தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு சன் ரைசர்ஸ் அணியால் 80 சவரன் தங்க சங்கிலியுடன் கூடிய மெடல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே கடந்த 20 ஏப்ரல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் 65 அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமார் உட்பட மூத்த வீரர்கள் பலரும் அவரது பந்து வீச்சைப் பாராட்டினர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைப் பாராட்டி அந்த அணியின் வீரர்கள் கவுரவிக்கப்படுவதும், அதை வீடியோ எடுத்து அணிகள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதும் தற்போது டிரெண்டாகி வருகிறது. மற்ற அணிகள் சிறிய அளவிலான தங்க பேட்சுகள் மற்றும் இதர பரிசுகளை வழங்கி வருகிறது. ஆனால், சன் ரைசர்ஸ் அணி ஒருபடி மேலே போய் ஒரு பெரிய தங்க சங்கிலியையே பரிசாக நடராஜனுக்கு வழங்கி கவுரவம் செய்துள்ளது. 80 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்து, அவர் அந்த சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.