Advertisment

மூணு வருஷமா மும்பையிடம் ஜெயிச்சதே இல்ல! - ஐ.பி.எல். போட்டி #41

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Advertisment

mi

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி, மீதமிருக்கும் எல்லா போட்டிகளிலும் ஜெயித்தாக வேண்டிய முக்கியமான கட்டத்தில் புத்துயிர் பெற்றிருக்கிறது. எந்தெந்த இடத்தில் எல்லாம் பிழைகள் இருப்பதாகத் தெரிந்ததோ, அது எல்லாவற்றையும் ஓரளவிற்கு சரிசெய்துகொண்டு மும்பை அணி தொடரை புதிதாகத் தொடங்கியிருக்கிறது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

அதேசமயம், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கடைசியாகமும்பை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு தோற்றது. இன்று, தன் சொந்த மண்ணில் அதே மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.இந்த இரண்டு அணிகளும் இதுவரை மோதிய 22 போட்டிகளில் மும்பை அணி 17 ஆட்டங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல், இன்றைய போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் களமிறங்கிய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே கொல்கத்தா அணி வெற்றிபெற்றிருக்கிறது.

அதிலும் குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு கொல்கத்தா அணி இதுவரை ஒருமுறை கூட மும்பை அணியை வீழ்த்தியதே கிடையாது. ஒருவேளை அதே நிலைமை இன்றைக்கு வந்தால்கூட, புள்ளிப்பட்டியலில் தற்காலிகமாக எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், அதுவே தொடரப்போவதில்லை என்பதை கொல்கத்தா அணி கணக்கில் கொள்ளவேண்டும்.

KKR mi ipl 2018
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe