Advertisment

டி20 போட்டி; ஒரே நாளில் இந்தியாவுக்கு இரண்டு தோல்விகள்...

fdgdfg

Advertisment

இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டன்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிம் சேபெர்ட் 84 ரன்கள் விளாசினார். மேலும் அந்த அணியின் மன்றோ மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் 34 ரன்கள் எடுத்தனர். இறுதியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்தது. 220 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன் பின் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 20 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக தோனி 39 ரன்களும், ஷிகர் தவான் 29 ரன்களும், தமிழக வீரர் விஜய் ஷங்கர் 27 ரன்களும் அடித்தனர்.

Dhoni indvsnz
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe