dfdfdsf

Advertisment

இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டன்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிம் சேபெர்ட் 84 ரன்கள் விளாசினார். மேலும் அந்த அணியின் மன்றோ மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் 34 ரன்கள் எடுத்தனர். இறுதியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்தது. 220 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.