Advertisment

ஷமி, குல்தீப் யாதவ் அசத்தல்; சொற்ப ரன்களில் சுருண்ட நியூஸிலாந்து...

gftn

Advertisment

இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய குப்தில் மற்றும் மன்றோ ஆகியோராது விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே அடுத்தடுத்து முகமதுஷமி வீழ்த்தினார். இதன் மூலம் வெறும் 56 ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார். நியூஸிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் இருந்தன. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூஸிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

indvsnz
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe