Advertisment

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி; முன்கூட்டியே முடிக்கப்பட்ட ஆட்டம்...

sdvz

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்டின் மூன்றாம் நாளான இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 386 ரன்கள் பின்தங்கியுள்ளது. சிறப்பாக பந்து வீசிய இந்தியா சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்றாம் நாளான இன்று போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் ஹன்ட்ஸ்கோம்ப் 28 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாள் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக போராடி வருகிறது.

Advertisment

sydney indvsaus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe