இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ரன் எடுக்க திணறி வருகிறது. இன்று காலை பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 151 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவை விட 296 ரன்கள் பின்தங்கியது. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி தொடக்கம் முதலே சொதப்பியது. அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் இறுதியாக மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி; இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி திணறல்
Advertisment