Advertisment

டி20 உலக கோப்பை - இந்திய அணி அறிவிப்பு

India's squad for T20 World Cup has been announced.

அக்டோபர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த நிலையில் நடந்து முடிந்த ஆசியா கோப்பையில் சூப்பர் 4 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது.

Advertisment

இந்நிலையில் டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, ரிஷாப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, அஸ்வின், சஹால், அக்சர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

மேலும் முகம்மது ஷமி, தீபக் சாகர், ரவி பிஷனாய், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஸ்டாண்ட் பை பிளேயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

bcci
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe