இந்திய டி20 அணியில் மூன்று தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

India’s squad for Paytm T20I series against England announced.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், சஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், திவேதியா, தீபக் சாஹர், நவ்தீப், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.

India’s squad for Paytm T20I series against England announced.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 12- ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

England Cricket indian cricket t20 virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe