dfhx

Advertisment

இந்தியா நியூஸிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்த நியூஸிலாந்து அணி ரன் அடிக்க மிகவும் சிரமப்பட்டது. இறுதியில் 49 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து. 193 என்ற எளிய இலக்குடன் தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிரிதி மந்தனாவும், ஜெமிமாவுமே வெற்றிக்கு தேவையான 193 ரன்களை குவித்தனர். கடைசி நேரத்தில் ஸ்மிரிதி மந்தனா அவுட் ஆக, கடைசி ரன்னை அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார் ஜெமிமா. இதனையடுத்து 33 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னலை பெற்றுள்ளது.