டி20 உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

indian women team qualified for t20 worldcup finals

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சிட்னியில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனையடுத்து புள்ளிகள் அடைப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் ஸ்டேஜில் இந்திய அணி 8 புள்ளிகளும், இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடனும் இருந்தன. இந்த நிலையில், அரையிறுதிப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால், புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், இந்திய மகளிர் அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்த கோலியின் ட்விட்டர் பதிவில், "டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும் இறுதிப் போட்டிக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.