
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்ணனிநட்சத்திரம்ஹர்மன்பிரீத் கவுர். பஞ்சாபை சேர்ந்த இவர், இந்திய இருபது ஓவர் மகளிர் அணிக்கு கேப்டனாகவும் உள்ளார். இந்தநிலையில்இவருக்குகரோனாதொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின்அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்த தகவலை தனது சமூகவலைதள பக்கங்களில் தெரிவித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர், கடந்த ஏழு நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கரோனாபரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவர், கடவுளின் அருளாலும், உங்கள் (ரசிகர்களின்) வாழ்த்துக்களாலும்விரைவில் களத்திற்குத் திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் ஹர்மன்பிரீத் கவுர், முகக்கவசங்களை அணிந்து, பாதுகாப்பாக இருக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஹர்மன்பிரீத் கவுர், விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், சமூகவலைதளங்கள் மூலமாகஅவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us