Advertisment

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு!

INDIAN WOMEN

மகளிருக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 4 ஆம் தேதி நியூசிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்தநிலையில்இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக மிதாலி ராஜூம், துணை கேப்டனாகஹர்மன்ப்ரீத் கவுரும்நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

உலககோப்பைக்கான இந்திய அணியில் மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்கூர் தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில், தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகக்கோப்பைதொடருக்கான இந்திய அணியே, அடுத்த மாதம் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ குறியுள்ளதும்கவனிக்கத்தக்கது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe