Skip to main content

ரசிகர்களை வியப்படைய வைத்த இந்திய அணி.. ஓராண்டுக்குள் இப்படி ஒரு சாதனையா...

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

பிலிப்பைன்ஸில் நடந்த பெண்களுக்கான ஆசிய டிவிஷன் 1 ரக்பி தொடரின் மூலம் 15 பேர்  கொண்ட இந்திய மகளிர் அணி தனது முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவிற்கான இந்த பெண்களுக்கான ரக்பி அணி அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில், இந்திய அணி இந்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே தனது முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

 

indian women rugby team marks its first international win and makes history

 

 

அதுவும் தனது முதல் வெற்றியை வலுவான சிங்கப்பூர் அணிக்கு எதிராக பதிவு செய்தது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்தியாவின் இந்த இளம் அணி, சிங்கப்பூரை 21-19 என்ற புள்ளி கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்திய மகளிர் ரக்பி அணியின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ரக்பி உலகக்கோப்பை தேர்வுக்கு மிக முக்கியமான இந்த ஆசிய டிவிஷன் 1 தொடரில் இந்திய அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.