Skip to main content

30 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி படைத்த மோசமான வரலாறு...

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி இந்தியாவை வைட்வாஷ் செய்துள்ளது.

 

indian team whitewashed afetr 30 years

 

 

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ராகுல் சதமும்,  ஷ்ரேயஸ் ஐயர் அரைசதமும் அடித்தனர். 50 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 296 ரன்கள் குவித்தது. 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய நியூஸிலாந்து அணி, 48 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வைட்வாஷ் செய்துள்ளது.

இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் கடைசியாக தோற்றது 1989 மார்ச் மாதம் ஆகும். மேற்கிந்திய தீவுகளிடம் திலீப் வெங்சர்கர் தலைமையிலான இந்திய அணி பிரிட்ஜ்டவுனில் நடந்த முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது மற்றும் முன்றாவது போட்டியில் இந்திய அணியை விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நான்காவது ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ஐந்தாவது ஒருநாள் போட்டியை 101 ரன்கள் வித்தியாசத்திலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது. அதன்பின்னர் இந்தியா வைட்வாஷ் செய்யப்பட்டது இப்போதுதான்.

கடந்த 2006 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா உடன் நடைபெற்ற தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தாலும், 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் ஒரு ஆட்டம் நடைபெறவில்லை. எனவே அதனை வைட்வாஷாக கருத முடியாத சூழலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்திய அணி மீண்டும் வைட்வாஷ் ஆகியுள்ளது.  

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

வாய்ப்பை இழந்த பாக்! நியூஸியை எதிர்கொள்ளும் இந்தியா! 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Pak missed the chance! India facing Newsi!

 

உலகக் கோப்பை லீக் போட்டியின் 43வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தா மாநிலம், ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான டேவிட் மாலன் 39 பந்துகளில் 31 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 61 பந்துகளில் 59 ரன்களையும் குவித்து தங்களது விக்கெட்களை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய ரூட் 72 பந்துகளில் 60 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஏனைய வீர்கள் 30 ரன்களுக்குள்ளாகவே ஸ்கோர் செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 337 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் எந்த வீரரும் சதம் அடிக்காமலே 337 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரை, ஷகீன் அஃப்ரிடி 2 விக்கெட்களையும், மொஹமது வாசீம் 2 விக்கெட்களையும், அஹமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹரிஸ் ரவூஃப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

 

இந்தப் போட்டியில், 6.2 ஓவர்களில் 338 இலக்கை அடைந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் எனும் நிலை இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிறகு 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. 

 

இதன் மூலம் தற்போது, இந்தியா, தென் ஆப்பிரகா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. மேலும், நவம்பர் 15ம் தேதி மும்பையில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஒரு அரை இறுதி போட்டியிலும், நவம்பர் 16ம் தேதி கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மற்றொரு அரை இறுதி போட்டியிலும் மோதுகின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெரும் இரு அணிகள் குஜராத் மாநிலம், அஹமாத்பாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டியில் மோதும்.