INDIAN TEAM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்இந்தியாவும் நியூஸிலாந்தும்பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த இறுதி போட்டி வரும் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான15 பேர்கொண்டஇந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றமில்லை. அதேநேரத்தில் கே.எல் ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்டில்விளையாடாத பும்ரா, அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்த ஷமி அணிக்கு திரும்பியுள்ளார்.

Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு: விராட் கோலி,ரஹானே, ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா,பும்ரா, இஷாந்த் சர்மா , முகமது ஷமி, உமேஷ் யாதவ்.