இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், தனது இடது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டுவந்தார். தற்போது காயம் குணமடைந்து முழு உடல் தகுதியை பெற்றுள்ளார்.

Advertisment

kedar jadhav

நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை எதிர்கொண்டது. அப்போது ஜடேஜா எரிந்த பந்தை கேதர் ஜாதவ் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கேதர் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது.

ஆனால் தற்போது கேதர் ஜாதவின் காயம் குணமடைந்து அவர் முழு உடல் தகுதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி இந்த மாதம் 22-ம் தேதி இங்கிலாந்துக்கு பயணிக்கிறது. தற்போது கேதர் ஜாதவின் காயம் குணமடைந்துள்ளதால் 22-ம் தேதி கிளம்பும் இந்திய அணியுடன் ஜாதவும் புறப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.