நியூசிலாந்து தொடர்: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

RAHANE PUJARA

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ள இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கெதிரானஇருபது ஓவர் போட்டிகளில் விளையாடப்போகும்இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது நியூசிலாந்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே வெளியான தகவல்கள் தெரிவித்தபடி, ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விராட் கோலிக்கு முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் விராட் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அணியில் இணைவதுடன் அணியை வழிநடத்துவார் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வருமாறு:ரஹானே (கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சஹா, கே.எஸ். பாரத், ஜடேஜா, அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

ajinkya rahane INDIA VS NEW ZEALAND MATCH team india
இதையும் படியுங்கள்
Subscribe