Advertisment

வங்கதேசத்திடம்  இந்திய அணி தோல்வி!

Indian team lost to Bangladesh!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று (15-09-2023) இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால்சம்பிரதாயமாக நடந்த இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்காது என நினைத்த ரசிகர்களை,நேற்றைய வங்கதேச அணியின் ஆட்டம் இருக்கை நுனியில் அமர வைத்தது.

Advertisment

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று (15-09-2023) இந்தியா-வங்கதேச அணிகள் பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். வங்கதேச அணி சார்பில் தொடக்கத்தில் தன்சித் ஹசன்-லிட்டன் தாஸ் கூட்டணி களமிறங்கியது. போட்டியின் தொடக்கத்திலே வங்கதேச அணி தனது முதல் விக்கெட்டை இழந்து தடுமாறத் தொடங்கியது. ஆம், 5.4 ஓவர்களில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில், லிட்டன் தாஸ் டக் அவுட் ஆக, தன்சித் 13 ரன்களும், அனமுள் ஹேக் 4 ரன்கள் என வெளியேறினர். இப்படி தொடர்ந்து விக்கெட்டுகளைஇழந்தவங்கதேச அணியை மீட்டெடுக்க அணியின் கேப்டன் சகிப் களமிறங்கினார். சகிப் மற்றும் மேஹிடி ஹசன் கூட்டணி அமைத்து ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஆனாலும், ஒரு கட்டத்தில் மேஹிடியால் சகிப்பிற்கு ஈடு கொடுத்துவிளையாட முடியவில்லை. இதனால் அவர் 13.6 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய அணியின் அதிரடி வீரர் தௌஹிட் ஹ்ரிடாய் சிறப்பாக விளையாட வங்கதேசம் சரிவில் இருந்து மீண்டது. ஒரு புறம் சகிப் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விலாச, தௌஹிட் நிதானமாக துணை நின்று விளையாடினார். அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை சேர்த்து அசத்தியது.

Advertisment

சிறப்பாக விளையாடிய சகிப் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கையில், 80 ரன்கள் எடுத்து சர்துல் தாக்குரின் வேகப் பந்தில் கிளீன் பவுல்ட் ஆனார். இவர், 6 பவுண்டரிகள், 3 சிச்கர் என விளாசினார். பின்னர், களமிறங்கிய ஷமீம் ஹோசைன் 1 ரன்கள் எடுத்து வெளியேறியதால் வங்கதேசம் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டது. அடுத்து விளையாட வந்த நசும் அஹ்மத் தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கை தரும் வகையில் விளையாடினார்.

200 ரன்களை நெருங்கிக் கொண்டிருந்த வங்கதேசம் அணி திடீரென ஹ்ரிதாய் விக்கெட்டை இழந்தது. நிதானமான ஆடிய அவர், 54 ரன்கள் சேர்த்தார். இப்படி பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேற வங்கதேசம் 193 ரன்களுக்கு 7 வீரர்களை இழந்து நின்றது. இருந்தும் நசும் அஹ்மத் இறுதியில் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்து பவுல்ட் ஆனார், பின்னர், மஹேடி அசன், தன்சீம் இருவரும் இறுதி வரை களத்தில் நின்று 9 ஆவது விக்கெட்டுக்கு 40 ரன்கள்சேர்த்தனர். இறுதியில் வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில், ஷர்துல் தாக்கூர்,முகமது சமி தலா 3 விக்கெட்டுகளும்,பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷல் படேல், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும்கைப்பற்றினர்.

266 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிதொடக்கத்தில் ரோகித் சர்மா-சுப்மன் கூட்டணி இறங்கியது. இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தின் 2வது பந்திலே டக் அவுட் ஆகினார். பின்னர், தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாட வந்தார் திலக் வர்மா. எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 ரன்கள் எடுத்து பவுல்ட் ஆனார். அடுத்து 3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களம் கண்டார். இவர் சுப்மன் கில்லுடன் இணைந்து கூட்டணி அமைக்க இந்திய அணியின் ரன்கள் சற்று கூடியது. இதனால், இந்த இருவர் கூட்டணி 50 ரன்களை எடுத்தது. நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கிய நிலையில்ராகுல் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடி வீரர் இஷான் கிஷன் களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 94 ரன்களுக்கே 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இப்படி தொடர்ந்து இந்திய வீரர்கள் அவுட் ஆகி சென்றாலும் சுப்மன் மறுபுறம் அற்புதமாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கி சற்று நம்பிக்கை அளித்தார். பின் அவரும் 26 ரன்களில் சகிப் பந்தில் பவுல்ட் ஆனார்.

இவரைத் தொடர்ந்து ஜடேஜா கலம்கண்டு 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், சுப்மன் கில் மட்டும் வங்கதேச பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். அவர், 133 பந்துகளில் 121 ரன்களை குவித்தார். அதில், 8 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும். பின்னர், அவரும் 43.4 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இருந்தும் அக்சர் படேல் களத்தில் இருந்தது நம்பிக்கை அளித்தது. ஆனால், அவருடன் விளையாடிய சர்துல் தாகூர் 11 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பின்னர், முகமது சமி களமிறங்கினார். அக்சர் படேல் தன்னால் முடிந்த வரை போராடி42 ரன்கள் சேர்த்தார் அவுட் ஆக வெற்றி வாய்ப்பு இந்திய அணியிடம் இருந்து நழுவியது.

முடிவில் இந்திய அணி அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் சேர்த்தது. இதனால், வங்க தேசம் 6 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச பவுலிங்கில் ,முஸ்டபிசூர் 3 விக்கெட்டுகளையும், தன்சிம், மஹேடி ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும், சகிப்பும், மேஹிடி ஹசனும் தலா 1 விக்கெட்டும்எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதைசகிப் ஹல் ஹசன் பெற்று கொண்டார். நாளை (17-09-2023), இந்தியா-இலங்கை ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும்.

Bangladesh India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe