பிரித்வி ஷா, உமேஷ் யாதவிற்கு வாய்ப்பு - முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி அறிவிப்பு!

indian team

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவதுடெஸ்ட்போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்தநிலையில், அந்த போட்டியில்இந்திய அணியின் சார்பாககளம் இறங்கப்போகும்11 பேர் யார் என்பதைஇந்தியகிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியில், மயங்க் அகர்வாலோடு பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக இறங்கவுள்ளார். சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. பும்ரா, ஷமி ஆகியோரோடு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் களமிறங்குகிறார். விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா விளையாடவுள்ளார். ரிஷப் பந்த்திற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

நாளைய போட்டியில்ஆடப்போகும்11 வீரர்கள்: விராட்கோலி, ரஹானே, புஜாரா, அஸ்வின், ஹனுமாவிகாரி, ப்ரித்வி ஷா, உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி, மயங்க் அகர்வால், விருத்திமான்சஹா.

team india Test cricket
இதையும் படியுங்கள்
Subscribe