bumrah siraj

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட்போட்டி, சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இப்போட்டியில், இனவெறி சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisment

இந்தியகிரிக்கெட்அணியின்வீரர்கள்பும்ரா, சிராஜ் ஆகியோரை, மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் நேற்றும், இன்றும் இனரீதியிலான வார்த்தைகளைக் கூறி காயப்படுத்தியுள்ளனர். இன்றைய ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த இனரீதியிலான தாக்குதல் எல்லைமீறவேஇந்தியகேப்டன்ரஹானே, அஸ்வின் ஆகியோர் நடுவர்களிடம் புகாரளித்தனர்.

Advertisment

இதன்பிறகு இன்றைய நாளின்ஆட்டம் முடிவடைந்ததும், போட்டி நடுவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய அணி நிர்வாகத்தினர் ஆகியோர் வீரர்களோடு, இதுகுறித்து விவாதித்தனர். மேலும் இதுகுறித்து, சர்வதேச கிரிக்கெட்வாரியத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.