Advertisment

டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இங்கிலாந்து தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

team india

டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வத்தை ரசிகர்களிடம் மீண்டும் ஏற்படுத்தும் விதமாகக் கொண்டுவரப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்குப் பிறகுஇந்தியஅணி, இங்கிலாந்தோடு4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்குமான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது காயமடைந்த இஷாந்த், முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிமற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குமானஇந்திய அணி வருமாறு...

ரோஹித், சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே (வி.சி), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த், முகமது ஷமி, சிராஜ், ஷார்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

கே.எல் ராகுல் & சஹா ஆகிய இருவரும் உடல்தகுதிபெற்றால் அணியில் இடம்பெறுவார்கள்என அறிவிக்கப்பட்டுள்ளது.

INDIA VS ENGLAND WORLD TEST CHAMPIONSHIP team india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe