ADVERTISEMENT

உலகின் சிறந்த ஸ்பின் இணையாக உருவெடுத்த இளம் ஸ்பின்னர்கள்

04:07 PM Jan 22, 2019 | tarivazhagan

கபில் தேவ், ஸ்ரீநாத், ஜாகிர்கான் வரிசையில் யார் என்ற கேள்வி கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. இந்த நிலையில் பும்ரா மற்றும் புவனேஷ் குமாரின் பவுலிங் இந்திய அணிக்கு பெரிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது. அகர்கர் மற்றும் இர்ஃபான்பதான் தொடக்க காலகட்டங்களில் சிறப்பாக விளையாடினாலும், நிலையாக தொடர்ந்து அவர்களால் அதே ஃபார்மில் ஜொலிக்க முடியவில்லை. எப்போதும் ஃபாஸ்ட் பவுலிங்கில் பிரச்சனையை சந்தித்து வரும் இந்திய அணிக்கு, 20 வருடங்களாக பவுலிங்கில் பக்கபலமாக இருப்பது ஸ்பின்னர்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

புவனேஷ் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் முக்கிய ஃபாஸ்ட் பவுலர்கள். ஆனால் 3-வது ஃபாஸ்ட் பவுலர் யார் என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது. ஷமி ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக செயல்பட்டார். கலீல் அஹமது மற்றும் சிராஜ் ஆகியோர் கிடைத்த வாய்ப்புகளில் பெரிதாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அணியின் ஃபாஸ்ட் பவுலிங் இப்படியென்றால், ஸ்பின் பவுலிங் இதற்கு நேர்மாறாக உள்ளது. ஃபாஸ்ட் பவுலிங்கில் யார் உள்ளே என்பது பிரச்சனை. ஆனால் ஸ்பின் பவுலிங்கில் யார் வெளியே என்பது பிரச்சனை என்ற அளவிற்கு சாதித்துள்ளனர் ஸ்பின் பவுலர்கள்.

2000-களில் ஹர்பஜன்-கும்ப்ளே, 2010-களில் அஷ்வின்-ஜடேஜா என ஒவ்வொரு முறையும் சிறந்த ஸ்பின் இணை இந்தியாவிற்கு அமைந்து வந்தது. ஐ.பி.எல். போட்டிகள், ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்திலும் கலக்கி வந்தது அஷ்வின்-ஜடேஜா இணை. ஆனால், 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளும் ஒருநாள் போட்டிகளில் அஷ்வின்-ஜடேஜா இணைக்கு சோதனையாக அமைந்தது.

ஸ்பின் பவுலர்களிடம் ஒரு அணி எதிர்பார்ப்பது மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுபடுத்துவது மற்றும் விக்கெட் எடுப்பது. இந்த இரண்டு காரணிகளிலும் அஷ்வின், ஜடேஜா இருவரும் 2016, 2017-ல் தோல்வியுற்றனர். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த இவர்களுக்கு மாற்றாக புதிய ஸ்பின் பவுலர்களை தேட தொடங்கியது இந்திய அணி. அப்போது ஐ.பி.எல். போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடிவந்த யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அந்த தேடலில் கிடைத்த இளம் நட்சத்திரங்கள்.

இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினர் சாஹலும், குல்தீப் யாதவ்வும். இதனால் அஷ்வின், ஜடேஜா இருவரும் ஓரம் கட்டப்பட்டனர். இருப்பினும், ஆல்-ரவுண்டர் திறமை மூலம் அவ்வப்போது ஜடேஜா அணியில் விளையாடி வந்தார். அணியில் இடம்பெற்ற சில மாதங்களில் பவுலிங்கில் சாதனைகளை புரிய தொடங்கினர் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இணை.

குல்தீப் யாதவ் இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்கள், 4.82 எகானமி ரேட், பவுலிங் சராசரி 21.23. வெளிநாடுகளில் 24 போட்டிகளில் 49 விக்கெட்கள் 4.48 எகானமி ரேட், பவுலிங் சராசரி 19.80. உலக கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் 3 போட்டிகளில் 9 விக்கெட்கள், 4.93 எகானமி ரேட், 16.44 பவுலிங் சராசரி மற்றும் சிறந்த பந்து வீச்சாக 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்தது.

யுவேந்திர சாஹல் இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் 62 விக்கெட்கள், 4.73 எகானமி ரேட், பவுலிங் சராசரி 23.76. வெளிநாடுகளில் 22 போட்டிகளில் 41 விக்கெட்கள், 4.50 எகானமி ரேட், பவுலிங் சராசரி 21.98, சிறந்த பந்து வீச்சாக 42 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்தது. உலக கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் 3 போட்டிகளில் 2 விக்கெட்கள், 4.50 எகானமி ரேட், 67.50 பவுலிங் சராசரி.

கடந்த 2 வருடங்களில் ஸ்பின் பவுலர்களில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்களில் முதல் 4 இடங்களில் 2 இந்திய வீரர்கள் உள்ளனர். இந்திய அணியில் யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து 125 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர். உலகின் சிறந்த ஸ்பின் பவுலர்களாக உருவெடுத்துள்ளனர். ரன்களை கட்டுபடுத்துவது, விக்கெட்கள் எடுப்பது என இரண்டிலும் அசத்தி வருகின்றனர். மிகவும் சில போட்டிகளில் மட்டுமே இவர்கள் பந்துவீச்சு எடுபடமால் இருக்கிறது. மற்ற போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT