Advertisment

"அவர்கள் மிகவும் நல்லவர்கள், பழிவாங்குவது குறித்து யோசிக்க கூட முடியாது" கோலி பேச்சு...

இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisment

indian skipper kohli about newzealand team and first t20 match

இந்நிலையில் போட்டிக்கு முன் இந்திய அணியின் கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணியிடம் உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்ததற்கு இந்திய அணி இந்த தொடரில் பழிவாங்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கோலி, "நீங்கள் பழிவாங்குவதைப் பற்றி நினைக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் நல்லவர்கள். எனவே அதுபற்றிய யோசனைக்கே நம்மால் வர முடியாது. நேர்மையாக சொல்லவேண்டுமானால், நாங்கள் இவர்களுடன் நன்றாகப் பழகுகிறோம். அவர்கள் ஒரு சிறந்த அணியாக இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்கள் மீது நிறைய மரியாதை இருக்கிறது. அதேபோல அவர்களும் எங்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றபோது நாங்கள் அவர்களுக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்" என தெரிவித்தார்.

Advertisment
Newzealnd team india virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe