Indian Team

இணையத்தில் அதிகம் தேடப்படும் தேடல்களின் எண்ணிக்கையை வைத்து பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்திய வீரர் விராட்கோலி, ரோஹித்ஷர்மா, தோனி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

Advertisment

இந்தாண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தின் இணைய தேடல்களை அடிப்படையாக வைத்து 'SEN rush' ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் இந்திய வீரர் விராட்கோலி உலக அளவில் 16.2 லட்சம் முறை தேடப்பட்டு முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் தவிர முதல் பத்து இடங்களில் முறையே, ரோஹித் ஷர்மா, தோனி, ஜார்ஜ்மெக்கே, ஜோஷ்ரிச்சர்ட்ஸ், ஹர்திக் பாண்டியா, சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் மேத்யூஸ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Advertisment

கிரிக்கெட் அணிகளின் தேடலிலும் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.