இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறிய நிலையில் மீண்டும் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.

Advertisment

indian players got struck in england due to flight ticket reservation

புதன்கிழமை நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், பிசிசிஐ அமைப்பு இந்திய வீரர்கள் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சொதப்பியுள்ளது. இந்திய வீரர்களுக்கு இன்னும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யாததால், அவர்களால் இந்தியா திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Advertisment

இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று, மான்செஸ்டரில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து வெளியேறினர், ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விமான டிக்கெட்டுகள் கிடைக்காததால், அதுவரை அவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அடுத்த வாரத்தில் சில வீரர்களும், இரண்டு வாரங்கள் கழித்து மீதமுள்ள வீரர்கள் இந்தியா வருவார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.