Advertisment

நடிகையை கரம் பிடித்த கே.எல். ராகுல்; குவியும் வாழ்த்துகள்

indian cricketer KL Rahul married actress Athiya Shetty

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும், அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும் இருந்து வருகிறார் கே.எல். ராகுல். இவரும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். அதியா ஷெட்டியும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி இருவரும் கடந்த சில வருடங்களாகவே ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்திருக்கின்றனர். ஆனால் கடந்த வருடம்தான் இருவரும் காதலிப்பதை உறுதி செய்துள்ளனர்.

விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று மஹாராஷ்டிராவில் இருக்கும் பண்ணை வீட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் மணமக்களின் இரு வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவருக்கும், பலரும் தங்களது வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர். மேலும் வரவேற்புநிகழ்வுவெகு விமரிசையாக நடத்தப்பட்டு, அதில் திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல முக்கிய நபர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe