இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் செர்பியநடிகையும், மாடலுமான நட்டசா ஸ்டான்கோவிக்கும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின் இருவரும் முறைப்படி தங்கள் காதலை பொது வெளியில் அறிவித்தனர். சில மாதங்களுக்கு முன்னால், அவர் காதலி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளசெய்தியை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.