Advertisment

ஆசிரியர் தினமும்... இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்துகளும்... 

indian players

Advertisment

செப்டம்பர் 5-ம் தேதியானது ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இத்தினத்தில் அனைவரும் தங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர்களை நினைவு கூறுவதும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் வழக்கம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களை ஆளாக்கிய தங்களது பயிற்சியாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வீரர் விராட் கோலி தன்னுடைய வாழ்த்து குறிப்பில், "எங்களை ஊக்குவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன் ரஹானே, "பயிற்சியாளர்கள், சக வீரர்கள், வழிகாட்டிகள், குடும்பத்தினர் என என்னை சுற்றியுள்ள அனைவர் மூலமும் நான் தினமும் புதுமையான விஷயங்களை கற்று வருகிறேன். எனக்கு கற்றுக்கொடுத்த அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

மேலும் ரோஹித்ஷர்மா தன்னுடைய பதிவில், "கிரிக்கெட்டை நான் சிறப்பாக கற்றுக்கொள்ள உதவிய பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள் என அனைவருக்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், "தன்னுடைய இளமைக் கால பயிற்சியாளரின் புகைப்படத்தை பதிவிட்டு நான் இந்த இடத்தில் இருப்பதற்கு வழிகாட்டிய மற்றும் கற்றுக்கொடுத்த உங்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

indian cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe