/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stuart-binny.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, முதல் தர மற்றும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான பின்னி இந்தியாவிற்காக 6 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஸ்டூவர்ட் பின்னி, கடந்த 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக வெறும் நான்கு ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே இந்தியப் பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக இன்று வரை நீடிக்கிறது.
ஓய்வு முடிவினை வெளியிட்டுள்ள ஸ்டூவர்ட் பின்னி, "சர்வதேச அளவில் எனது நாட்டிற்காக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)