மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி சமனில் முடிந்த நிலையில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது இந்தியா.

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 104 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இழக்குடன் களம் இறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 14.5 ஓவர்களில் வெற்றி அடைந்தது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளிடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 63 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.